(றிஸ்வான் சாலிஹூ)
BCAS கல்முனை வளாகமானது ஏ.ஜே.எம் பிரதர்ஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாமானது “இரத்ததானம் செய்வோம்; உயிர்களைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் BCAS கல்முனை வளாக கேட்போர் கூடத்தில் நேற்று (20) வியாழக்கிழமை இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வானது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியின் மேற்பார்வையின் கீழ் BCAS கல்முனை வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இரத்ததான நிகழ்வானது BCAS கல்முனை வளாகத்தினால் முதற்தடவையாக 2018 யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இவ்வாறான இரத்ததான முகாம்களை ஒவ்வொருவருடமும் BCAS கல்முனை வளாகம் நடாத்த உத்தேசித்துள்ளதாக ஏலவே கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறித்த இரத்ததான முகமானது BCAS கல்முனை வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது முகாமாகும்.
மேலும், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.டி.என் சிபாயா குறிப்பிடுகையில்,
இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் மற்றும் இரத்ததானம் செய்த நலன் விரும்பிகளுக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், COVID19 பரவல் காரணமாக அண்மைக்காலங்களில் மிகக்குறைந்தளவிலான இரத்ததான நிகழ்வுகளே இடம்பெற்றுள்ள சந்தர்ப்பத்தில் இது போன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும், குறித்த இரத்ததான நிகழ்விலே BCAS கல்முனை வளாக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் தங்களுடைய குருதிகளை தானம் செய்தனர்.
மேலும், எதிர்வரும் காலங்களிலும் BCAS கல்முனை வளாகமானது இது போன்ற CSR (Corporate Social Responsibility) செயற்பாடுகள் ஊடாக பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களில் ஏனைய பொதுநிறுவனங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்வதற்கு எதிர்பார்க்கின்றது என்று கல்முனை BCAS வளாகத்தின் முகாமையாளர் பொறியியலாளர் என்.ரீ.ஹமீட் அலி தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
August 21, 2020
Rating:



