இஸ்லாமிய புதுவருட நிகழ்வு


(றிஸ்வான் சாலிஹூ)


இஸ்லாமிய புது வருடத்தினை (முஹர்ரம் மாதம்) வரவேற்கும் முகமாக அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த விசேட நிகழ்வும், மார்க்க சொற்பொழிவும் கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களின் தலைமையில் இன்று (21) வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

                            

நிகழ்வின் தலைமை உரையினை  பாடசாலை முதல்வர் ஆற்றியதுடன்,புனித முஹர்ரம் மாதம் சம்பந்தமான விசேட உரையை கிழக்கிலங்கை அரபு கல்லூரி அதிபர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.அஷ்ரப் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

கல்லூரியின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.






இஸ்லாமிய புதுவருட நிகழ்வு இஸ்லாமிய புதுவருட நிகழ்வு Reviewed by Editor on August 21, 2020 Rating: 5