(றிஸ்வான் சாலிஹூ)
பட்டதாரிகளை பயிலுனர்களாக இணைத்துக் கொள்வதற்காக அரசினால் அண்மையில் வெளியிடப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் உள்ள பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் நாளை (01) செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளது என்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில்,இதற்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் தமது தேசிய அடையாள அட்டையினை சமர்ப்பித்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்வதற்காக சமூகம் தருமாறு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பிரதேச செயலகத்தின் அறிவித்தல்
Reviewed by Editor
on
August 31, 2020
Rating:
Reviewed by Editor
on
August 31, 2020
Rating:
