முதல்முறையாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.
துபாய் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த கர்ப்பிணி தாயொருவரே இக் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த பெண் கடந்த ஜூலை 10ஆம் திகதி துபாய் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, அவருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதியாக்கப்பட்டதையடுத்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார்.
23ஆம் தேதி கொழும்பு கிழக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
நேற்று (01)அந்தப் பெண் பிரசவத்திற்கு பிரசவ வேதனையில் இருப்பதை மருத்துவர்கள் கவனித்தனர்.
சத்திர சிகிச்சை மூலம் பிறந்த குழந்தையும் தாயும் இப்போது ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
குழந்தையும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய PCR பரிசோதனைகளுக்கு குழந்தையின் மாதிரிகள் அனுப்பப்பட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
(நன்றி News line)
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு நடந்த சம்பவம்!!
Reviewed by Editor
on
August 02, 2020
Rating:
Reviewed by Editor
on
August 02, 2020
Rating:
