(றிஸ்வான் சாலிஹூ)
2020ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் யாவும் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவது, வீடு வீடாகச் செல்வது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, விளம்பர பலகைகளைக் காண்பிப்பது, சுவரொட்டிகளைக் காண்பிப்பது, தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அனைவரிடத்திலும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இறுதி பொதுக் கூட்டம் ஹம்பாந்தோட்டையிலும், அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி மருதானையிலும், ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு, அலுத்கட பகுதியிலும், தேசிய மக்கள் சக்தி மாளிகாவத்தை பகுதியிலும் தமது இறுதி பொதுக் கூட்டங்களை நடாத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் பொதுத் தேர்தல் பிரச்சார கூட்டம்
Reviewed by Editor
on
August 02, 2020
Rating:
Reviewed by Editor
on
August 02, 2020
Rating:
