(எஸ். ஜலால்டீன், ஒலுவில்)
தென் கிழக்குதென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்திடம் ஒலுவில் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறத்தில் 'கொங்றீற் போஸ்ற்' மூலம் அமைக்கப்பட்டுள்ள வேலியானது இன்னும் சில தினங்களில் கடலரிப்பின் மூலம் அள்ளிச் செல்லக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
மேலும் பெருந்திரளானவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு பின் புறமாக உள்ள கடலில் குளிப்பதற்கென்று வெளியூர்களில் இருந்து வந்து கரையில் நடமாடுவதாலும் இளவயதினர் கரையை இடித்து விளையாடுவதாலும் மண்ணரிப்பு துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இங்கு குளித்த இரண்டு இளைஞர்கள் கடல் அலையில் சிக்குண்டு காப்பாற்றப்பட்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது.
எனவே, பல்கலைக்கழக நிருவாகத்தினர் குறித்த வேலியினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கரையோரப்பாதுகாப்புடன் சம்மந்தப்பட்டவர்கள் மண்ணரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் குளிப்பதற்கென்று இங்கு வருககை தரும் வெளியூரவர்களை இங்கு வராமல் தடை செய்யுமாறும், அவர்களை உல்லாசப் பிரயாணிகளுக்கென்று பிரகடனப்படுத்தப்பட்ட உல்லே மற்றும் பாசிக்குடா போன்ற கடற்கரைகளுக்குச் சென்று குளிக்க ஆலோசனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகிறோம் என்று ஒலுவில் சிவில் சமூகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்திடம் வேண்டுகோள்!!!
Reviewed by Editor
on
August 04, 2020
Rating:
Reviewed by Editor
on
August 04, 2020
Rating:
