தேசிய காங்கிரஸ் தலைவர் தனது வாக்கினை பதிவு செய்தார்


                                                             

(றிஸ்வான் சாலிஹூ)

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட தேசிய காங்கிரஸின் முதன்மை வேட்பாளருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் இன்று (05) புதன்கிழமை நண்பகல் வேளையில் தனது வாக்கினை அக்கரைப்பற்றில் பதிவு செய்து கொண்டார்.

                                                          

2020 பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் தன்னுடைய வாக்கினை அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்து கொண்டார்.

இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி குதிரை சின்னத்தில் தனித்து களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய காங்கிரஸ் தலைவர் தனது வாக்கினை பதிவு செய்தார் தேசிய காங்கிரஸ் தலைவர் தனது வாக்கினை பதிவு செய்தார் Reviewed by Editor on August 05, 2020 Rating: 5