அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை இன்று (20) நிகழ்த்தினார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து, நாளை (21) காலை 9.30 மணி வரையில் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் மிகவும் சாதாரணமானமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்பு போன்றவை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
Reviewed by Editor
on
August 20, 2020
Rating:
Reviewed by Editor
on
August 20, 2020
Rating:
