(எம்.ஜே.எம் பாரிஸ் - ஒலுவில்)
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க 23 தடவைகள் முயற்சித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மாத்திரமல்லாது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சராக கடமையாற்றியவருமான சஜித் பிரேமதாசவும் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக பதவியேற்குமாறு தனக்கு 13 தடவைகள் அழைப்பு விடுத்ததாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் பதவியை ஏற்குமாறு 10 முறை தனக்கு அழைப்பு விடுத்ததாக சஜித் பிரேமதாச சில மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க 23 முறை முயற்சித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்க 23 முறை முயற்சித்த மைத்திரி!
Reviewed by Editor
on
September 10, 2020
Rating:
Reviewed by Editor
on
September 10, 2020
Rating:
