சம்மாந்துறை தவிசாளராக மீண்டும் நௌஷாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

(றிஸ்வான் சாலிஹூ)

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளாரக மீண்டும் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் இன்று (02) புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபை உறுப்பினர்கள் மூலம் பொது வெளியில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் 13 வாக்குகளையும், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.மாஹிர் 7 வாக்குகளையும் பெற்றனர்.

இந்த வாக்கெடுப்பில் மு.கா. உறுப்பினர்கள் அனைவரும் தவிசாளர் நெளசாத் அவர்களுக்கே  வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





சம்மாந்துறை தவிசாளராக மீண்டும் நௌஷாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் சம்மாந்துறை தவிசாளராக மீண்டும்  நௌஷாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் Reviewed by Editor on September 02, 2020 Rating: 5