அக்கரைப்பற்றில் இருந்து சென்ற பஸ் தாழங்குடாவில் விபத்து, இரு இளைஞர்கள் பரிதாப மரணம்!

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு (மைக்ரோ) பஸ் ஒன்று ஆரையம்பதி, தாழங்குடா பகுதியில் இரு இளைஞர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்கள் குறித்த பஸ் மீது தாக்குதல் நடாத்தியதனால், பஸ் கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் தப்பி சென்றுள்ள நிலையில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அக்கரைப்பற்றில் இருந்து சென்ற பஸ் தாழங்குடாவில் விபத்து, இரு இளைஞர்கள் பரிதாப மரணம்!  அக்கரைப்பற்றில் இருந்து சென்ற பஸ் தாழங்குடாவில் விபத்து, இரு இளைஞர்கள் பரிதாப மரணம்! Reviewed by Editor on September 01, 2020 Rating: 5