(றிஸ்வான் சாலிஹூ)
2021ஆம் ஆண்டிற்கான புத்தளம் நகர சபையின் வரவு செலவு திட்டம் மேலதிக 05 வாக்குகளினால் இன்று (19) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ் 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இவ் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும், ஒரு உறுப்பினர் நடு நிலை வகித்ததோடு இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரவில்லை.
எவ்வாறாயினும் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு அடுத்தாண்டிற்கான அபிவிருத்தி வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதோடு அனைவருக்கும் நகர பிதா பாயிஸ் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
புத்தளம் பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் 05 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
Reviewed by Editor
on
November 19, 2020
Rating:
