அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட முசலி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேறியது.
முசலி பிரதேச சபை தவிசாளர் கெளரவ சுபியான் தலைமையில், இன்று(19) காலை இடம்பெற்ற கூட்டத்தின் பின்னரான வாக்கெடுப்பின் போது, 15 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையில், பொதுஜன பெரமுன காட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தார்.
முசலி பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
