
பாராளுமன்றம் இன்று (17) கூடிய போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, அரவிந்தகுமார் ஆகிய இருவருக்கும் அரசாங்கத் தரப்பில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் அரசாங்க தரப்பில் ஆசன ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு அரச தரப்பு பிரதம கொரடா ஜோன்ஸன் பெர்னாண்டோ முன்வைத்த கோரிக்கையையடுத்தே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை ஆதரித்த எதிரணி உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கும் அரச தரப்பில் ஆசன ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரை ஏற்கனவே கோரியிருந்தார்.
எனினும், ஏனைய ஆறு எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சித் தரப்பில் தனியான ஆசன ஒதுக்கீடு தற்போதைக்குச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Reviewed by Editor
on
November 17, 2020
Rating: