உடலை எரிப்பதா அடக்கம் செய்வதா சுகாதார தரப்பினரின் கையில் முடிவு!!!



கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதா ? அல்லது தகனம் செய்வதா ? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது, மாறாக சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்த தயாராக உள்ளோம் என அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை கொவிட்-19 வைரஸ் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் சுகாதார குழுவினரின் பரிசீலனைக்கு வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியது என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன் என்றார்.

உடலை எரிப்பதா அடக்கம் செய்வதா சுகாதார தரப்பினரின் கையில் முடிவு!!! உடலை எரிப்பதா அடக்கம்  செய்வதா சுகாதார தரப்பினரின் கையில் முடிவு!!! Reviewed by Editor on November 17, 2020 Rating: 5