ரஷ்ய அன்னையின் பார்வையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் நல விடுதி (வீடியோ இணைப்பு)



(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அண்மையில் உள்ளக சிகிச்சையைப் பெற்றுச் சென்ற ரஷ்யா நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு, வைத்தியசாலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பில் அவரது  தாய் சந்தோசமடைந்துள்ளார்.



இச் சிறுவனுக்கு ஆரம்பத்தில் நிணநீர்க்கணுவில் ஏற்பட்ட ஒரு தொற்று என உள்ளக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் Ludwig angina எனும் அதி தீவிர சிகிச்சைக்கு உள்ளாக வேண்டிய நோயாக இருக்குமோ எனும் அளவிற்கு இச்சிறுவனது தாடையும் கழுத்துப்பகுதியும் வீங்கி இருந்தது.

கிட்டத்தட்ட 2 கிழமைகளுக்கு மேலாக 4 ஆம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று பூரண சுகத்தோடு வெளியாகிச் சென்ற அந்தத் தாயின் அன்பு நிறைந்த வார்த்தைகளை வாழ்த்து மழையாக கொட்டிச் சென்றாள் ரஷ்யா நாட்டு அன்னை.

மருத்துவம் என்று வந்து விட்டால் நோயாளியின் நோயை மாத்திரமே கவனத்தில் எடுத்து பேதங்களின்றி சிகிச்சையளிப்பதே மருத்துவ தர்மம். அந்த வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையும் சிறுவர் நல விடுதி ஊழியர்களும் தங்களது கடமைகளை சரிவரச் செய்துள்ளார்கள் என்பது மகிழ்வே.

அதனடிப்படையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் பீ.எம் அர்ஷாத் அஹமட் மற்றும் வைத்திய உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் எல்லோரும் இந்த ரஷ்ய அன்னையின் பாராட்டுக்குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ரஷ்ய அன்னையின் பார்வையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் நல விடுதி (வீடியோ இணைப்பு) ரஷ்ய அன்னையின் பார்வையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் நல விடுதி (வீடியோ இணைப்பு) Reviewed by Editor on November 25, 2020 Rating: 5