கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக இழக்கப்பட்டுவிட்டதால். அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமையால் தாம் பட்டிணி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.
அரசாங்கம் உடனடியாகத் தமக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறு குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் தொடரும் ஊரடங்கினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் உரிய அதிகாரிகளின் கவனத்தில் எடுக்கனும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Reviewed by Editor
on
November 21, 2020
Rating:

