
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எல்.ஏ.கபூர் இன்று (20.11.2020) வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இப் பாடசாலையின் அதிபராக இருந்த திருமதி நயீமா சலாம் காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயத்திற்கு அதிபராக இடமாற்றப்பட்டதையடுத்து ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் பதில் அதிபராக எஸ்.எல்.ஏ.கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி நயீமா சலாம் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி நயீமா சலாம் பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எல்.ஏ.கபூரிடம் ஆவணங்களை கையளித்தார்.
Reviewed by Editor
on
November 20, 2020
Rating: