மர்ஹும் தாஜூதீன் ஞாபகார்த்தமாக சொற்பொழிவு


(றிஸ்வான் சாலிஹூ)

கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இவ்வுலகை விட்டு பிரிந்த அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) முன்னாள் உதவி அதிபரும், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் முன்னாள் பிரத்தியேக செயலாளருமான எம்‌.எம்.தாஜூதீன் அவர்கள் தொடர்பான ஞாபகார்த்த உரையும், துஆ பிரார்த்தனையும் இன்று (25) காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ஏ.பீ.முஜீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

மர்ஹும் தாஜூதீன் ஞாபகார்த்தமாக சொற்பொழிவு மர்ஹும் தாஜூதீன் ஞாபகார்த்தமாக சொற்பொழிவு Reviewed by Editor on November 25, 2020 Rating: 5