
(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய காங்கிரஸின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ், இன்று (12) வியாழக்கிழமை அக்கரைப்பற்று அஸ்-ஸாஹிறா வித்தியாலத்திற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

டசாலையின் தற்போதைய நிலைமைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை இவ்விஜயத்தின் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
இக்கள விஜயத்தில் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசிம், உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஜே.ஜெமீல், ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.சீ. அப்துல் ஹைய்யு, பாடசாலையின் EPSI இணைப்பாளர் எம்.ஏ.தாஹிர், பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் ஏ.ஆர்.தாஜூதீன் உட்பட ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
November 12, 2020
Rating:
