(றிஸ்வான் சாலிஹூ)
பொத்துவில் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் தோல்வி அடைந்துள்ளது என்று பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாஸீத் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (18) புதன்கிழமை காலை தவிசாளர் எம்.எஸ் வாஸீத் அவர்களினால் முன் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து தவிசாளரின் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் உள்ளடங்களாக ஏனைய கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 21 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள், தவிசாளரினால் முன் வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தமையினால் இவ் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்ததோடு, இப்பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குள் இருந்த சபை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
November 18, 2020
Rating:
