கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் பலி, மூவர் காயம்!


கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் ஐந்து பேர் நேற்றிரவு (17) செவ்வாய்க்கிழமை தப்பிச் செல்ல முயற்சித்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் பலி, மூவர் காயம்! கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் பலி, மூவர் காயம்! Reviewed by Editor on November 18, 2020 Rating: 5