(அலுவலக செய்தியாளர்)
தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவராக திரு.காரியப்பெருமகே பியசேன அவர்கள், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (29) செவ்வாய்க்கிழமை பதவியேற்றதாக பிரதமரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திரு.மிலான் ஜயதிலக அவர்கள் கடந்த பொதுத் தேர்தலின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் திரு.காரியப்பெருமகே பியசேன அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதோடு, இந்நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்றும் அந்த ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதேச சபையின் புதிய தலைவர் பதவியேற்றார்!!!
Reviewed by Editor
on
December 29, 2020
Rating:
