(பீ.எம்.றியாத்)
புதிய படைப்புகள் மூலம் இளம் தொழில் முனைவோரை உருவாக்கும் வேலைத்திட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாட்டின் இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் புதிய கண்டுபிடிப்பாளர் (Start of Sri Lanka) செயல்திட்டத்துக்கான மாவட்ட மட்டப் போட்டி இன்று (29) செவ்வாய்க்கிழமை ”யெவுன் நிக்கேதன” கூட்ட மண்டபத்தில் அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாதுரீக்க தலைமையில் சுகாதாரம் முறைப்படி நடைபெற்றது.
நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால மற்றும் நடுவர்கள்,மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் முன்னிலையில் நடைபெற்றது.
இளம் தொழில் முனைவோரை உருவாக்கும் வேலைத்திட்டம்
Reviewed by Editor
on
December 29, 2020
Rating:
