முன்மாதிரியான முஸ்லிம் கிராமம்!!

 


அட்டுழுகம கிராம மக்கள் தம்மை தாமே இன்று (29) முதல் 7 நாட்களுக்கு சுயமாகவே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அட்டுழுகம பிரதேசத்தில் உள்ள 8 கிராமசேவகர் பிரிவுகளிலும் இந்த நடைமுறையை மேற்கொண்டுள்ளனர்.


அந்த ஊரில் நியமிக்கப்பட்டுள்ள கோவிட் கமிட்டி, அட்டுழுகம ஜம்மியத்துல் உலமா, அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவன நேற்று (28) இரவு ஒன்று கூடி இந்த மேற்குறித்த முடிவை எடுத்துள்ளார்கள்.


கடைகள் அனைத்தையும் பூட்டி, இங்கு வாழும் மக்கள் எங்கும் வெளிச் செல்வதில்லை என ஊர் கூடி தீர்மானம் செய்துள்ள நிலையில் மிக அத்தியாவசியமான மருந்து பொருட்களை பெற்றுக் கொள்ள நடமாடும் சேவை கடை பிடிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்மாதிரியான முஸ்லிம் கிராமம்!! முன்மாதிரியான முஸ்லிம் கிராமம்!! Reviewed by Editor on December 29, 2020 Rating: 5