குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும் – அமைச்சர் சரத் வீரசேகர தகவல் !


(றிசாத் ஏ காதர்)

கொலைகள், பாரிய குற்றச் செயல்கள் சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைதான பின்னர், அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். 

நேற்று ஒரு இளைஞனை பொல்லுகள், கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டு கொடூரமாக தாக்கிய மூன்று நபர்கள் சி.சி.ரீவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

குறித்த மூன்று நபர்களின் விவரங்களுடன் புகைப்படங்களும் இன்று பொதுமக்களை விழிப்பூட்டும் பொருட்டும், குற்றச் செயல்களை குறைக்கும் வகையிலும் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. 

இதுபோன்ற குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரங்களைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டவுடன் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் குறித்து எதிர்காலத்தில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குற்றச் செயல்கள் தொடர்பில் அச்சத்துடன் அதிலிருந்து தவிர்ந்துகொள்ளும் பொருட்டே ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும் – அமைச்சர் சரத் வீரசேகர தகவல் ! குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும் – அமைச்சர் சரத் வீரசேகர தகவல் ! Reviewed by Editor on December 12, 2020 Rating: 5