அக்கரைப்பற்று பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் ஜம்மியத்துல் உலமாவின் அனர்த்த முகாமைத்துவ குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
2020.12.05 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக,
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் 7000 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏறத்தாழ இன்னும் 3000 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் அவசரத் தேவையுடையவர்களாக அனர்த்த நிவாரணப் பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
7000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் சமகாலத்தில் அடையாளம் காணப்பட்ட 3000 குடும்பங்களுக்கும் அனர்த்த நிவாரண பிரிவினால் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில்,பெறப்படும் நிதியுதவிற்கு ஏற்ப முதல் கட்டமாக ஒரு தொகுதியினருக்கு அவசரமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்படி நிவாரணப் பணிக்கு உள்நாட்டு / வெளி நாட்டு உறவுகள் தங்களால் முடிந்த உதவிகளை மிக அவசரமாக வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
M.B.A. Hameed (Secretary of AMF)
A/C 111154261019
Sampath Bank - Akkaraipattu
A.G. Abdul Rauf
(President - AKP Jamathe e Islami)
A/C 8002733810
Commercial Bank - Akkaraipattu
Iconic Youth
A/C 8172009741
Commercial Bank - Akkaraipattu
Royal Youth
A/C 8172006600
Commercial Bank - Akkaraipattu
APEC International
A/C 063100100058869
People's Bank - Akkaraipattu
எமது உறவுகளின் கஷ்டத்தில் பங்கெடுத்து இறைதிருப்தியை பெற்றுக் கொள்வோம்.
