(றிஸ்வான் சாலிஹூ)
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாசித் அவர்களின் தந்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால மூத்த போராளியான கே.பீ.எம். சரீப் ஹாஜியார் அவர்கள் வபாத்தானார் எனும் செய்தி மிகுந்த கவலையை என்னுள் உண்டாக்கியுள்ளது என்று கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் பேரியக்கத்தை பொத்துவிலில் வேரூண்ட செய்த அன்னார். அப்பிரதேசத்தில் பல துறைகளில் தனது தனது சேவைகளை கொண்டு முத்திரை பதித்துள்ளார். பொத்துவிலின் தேவைகள் அறிந்து அதை நிவர்த்தி செய்ய முடியும் என்று பலவழிகளில் முயன்ற ஒருவரை நாம் இழந்திருக்கிறோம்.
அன்னாரின் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அத்தனையையும் எல்லாம் வல்ல நாயகன் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கம் கிடைக்க இருகரமேந்தி பிராத்திப்பதுடன் தோழர் அப்துல் வாசித் உட்பட அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
சரீப் ஹாஜியாரின் மரண செய்தி வருத்தமளிக்கிறது - முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை
Reviewed by Editor
on
December 25, 2020
Rating:
Reviewed by Editor
on
December 25, 2020
Rating:
