கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பு..!!



இறந்து போன உடல்களை..
சுத்தம் செய்து அடக்க விடாமல்..
எரித்துச் சாம்பலாக்கத் துடித்து அலைகிறது..
பித்துப் பிடித்த ஷைத்தான் கூட்டமொன்று..!

உடலை மண்ணில்..
அடக்கம் செய்வதால்..
நிலக்கீழ் நீர் மாசடையும் என்று..
நியாயம் கூறுகின்றனர் வேனுமென்று..!!


தொற்றினால் மரணித்தவர்களின் உடலை..
அடக்கம் செய்வதால் மட்டும் தான்..
நிலக்கீழ் நீர் அசுத்தமாகுமா..?
நிலத்தில் தொற்றாளர்களின் கழிவுகளை விடுவது மட்டும் நியாயமா..??


மலசலம் கூட..
தொற்றாளர்களின் உடலில் இருந்து தானே..
வெளியேற்றப் படுகிறது..
பின்னர் அது நிலத்திற்குள் தானே செல்கிறது..??


இப்படிப்பட்டவர்கள் தொற்றாளர்களின் வியர்வைத் துளி முதல்..
அவர்களின் மலசலம் வரைக்கும்..
அள்ளி எடுத்துத் துப்பரவு செய்ய..
ஆளணியைத் திரட்ட வேண்டுமே..??


அப்படிச் செய்யவுமில்லை; செய்யவும் மாட்டார்கள்..
ஆனால் எரிப்பதற்காகவே எம்மவர்கள் மரணிக்க வேண்டுமென்று..
எப்போதும் தவியாய்த் தவிக்கிறார்கள்..
எங்கோ ஓரிருவர் மரணித்து விட்டாலும் கூட..
ஏளனமாகச் சிரிக்கிறார்கள்..!!


எரிப்பதில் எந்த நியாயமும் இல்லை..
அவர்கள் எரிப்பதில் எந்த நியாயமும் இல்லை..
எம்மில் உள்ள எரிச்சலைத் தணிப்பதற்கே..
எம்மவர்களை எரிக்கத் துடிக்கிறார்கள்..
எரித்துக் குவிக்கிறார்கள்..!!


எம்மவர்களின் உடல் மட்டும் எரியவில்லை..
எங்களின் உள்ளங்களும் தான் எரிகின்றன..
இறந்த உடல்களைத்தான் இப்போது எரிக்கிறார்கள்..
இறக்காமலே அவர்கள் ஓர்நாள் எரிக்கப்படுவார்கள்..!!


எங்களுக்கும் காலம் வரும்..
அப்போது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில்..
எறியப்பட்டு அவர்கள்; எரிக்கப்படுவார்கள்..
அநீதிகள் எல்லாம் அன்று எரிந்து சாம்பலாகும்..!!


எங்களின் ஏந்திய கரங்களை..
எமதிறைவன் வெறுமனே விட மாட்டான்..
அநியாயக்காரர்களையும் அப்படியே விட்டு வைக்கவும் மாட்டான்..
ஏனென்றால் நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி அவனேயாவான்..!!


ஆக்கம் - கலாரசிகை நிலாமகள்
செ. பாத்திமா றிப்னா றுமைஸ்
கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பு..!! கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பு..!! Reviewed by Editor on December 06, 2020 Rating: 5