(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை வட்டாரத்தில் உள்ள மோதினார் வீதி உள்ளுராட்சி அமைச்சின் LDSP செயற்திட்டத்தின் 2.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீதி புனரமைப்பு வேலைத் திட்டம் இன்று (30) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசிக், உதவித் தவிசாளர் முஹம்மட் அஸார், இசங்கணிச்சீமை வட்டார பொறுப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ரீ.எம்.ஐயூப், பிரதேச சபை உறுப்பினர்களான பர்ஷாத் மற்றும் சியான் ஆகியோரினால் இதற்கான அடிக்கல் நடப்பட்டு இவ்வேலைத்திட்டம் விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தவிசாளர் எம்.ஏ.றாசிக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி அமைச்சின் ஊடாகவும் மற்றும் ஒரு லட்சம் ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்தின் ஊடாகவும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு பல மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக எமது பிராந்தியத்தில் பாதைகள் மற்றும் பூங்கா வேலைத்திட்டங்கள் குறுகிய காலத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேச சபையை எமது பிராந்திய மக்களுக்கு வழங்கிய தேசிய காங்கிரசின் தலைமையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களுக்கு இந்த பிராந்திய மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம்.ஐயூப் கருத்து தெரிவிக்கையில்,
இன்ஷா அல்லாஹ் அக்கரைப்பற்று பிரதேச சபை தொடர்ச்சியாக தேசிய காங்கிரசின் எண்ணக் கருவில் உருவான ஒவ்வொரு கிராமங்களையும் இனம்கண்டு அதற்குரிய வேலைத்திட்டங்களை தலைமையின் ஆசிர்வாதத்துடனும், தவிசாளரின் தலைமையிலும் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த வட்டார மக்கள் மறக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளர் ஜனாப். இர்பான், தொழில்நுட்ப உத்தியோகத்தர்பாரிஸ் தமீம், இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் மற்றும் செயலாளர், முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.
