உதவிப் பொலிஸ் பரிசோதகர் திடீர் மரணம்




நிலாவெளி பொலிஸ் நிலயத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (20) அதிகாலை திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை நாச்சிக்குடா வை சேர்ந்த பி. எச். சுமண பண்டார (55)என்பவரே உயிரிழந்தவராவார். சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
உதவிப் பொலிஸ் பரிசோதகர் திடீர் மரணம் உதவிப் பொலிஸ் பரிசோதகர் திடீர் மரணம் Reviewed by Editor on December 20, 2020 Rating: 5