கொட்டும் மழையிலும் களப்பணியில் மாநகர சபை உறுப்பினர் சபீஸ்


(றிஸ்வான் சாலிஹூ)

கடந்த ஒரு மாத காலமாக, நாட்டில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலை அசாதாரண சூழ்நிலை அக்கரைப்பற்றிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியதை  தொடர்ந்து தற்போது ஊரின் நிலமை ஓரளவு முன்னேற்றமடைந்து வரும் நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை மற்றுமொரு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 



இந்த அடை மழை காரணமாக அக்கரைப்பற்றில் உள்ள சில தாழ்ந்த பகுதிகளில் நீர் நிரம்பிய நிலையில் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இந்த மழை நீர் மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத வண்ணம் மக்களையும் அந்த பகுதி மழை நீரை வேகமாக அக்கரைப்பற்றின் பிரதான  வடிகான் மூலம் வெளியேற்றுவதற்காக கனரக வாகனங்கள் மூலம் வாடிகான்களை தனது சொந்த செலவில் சுத்தம் செய்யும் அக்கரைப்பற்று பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ்‌‌.எம்.சபீஸ் கொட்டும் மழை பார்க்காமல் களத்தில் நின்று மக்களுக்காக பணி புரிந்து வருகின்றார்.



அது மாத்திரமல்லாமல், கொரோனா அசாதாரண காலப்பகுதியிலும் கூட தொழில் இன்றி நிர்க்கதியாக இருந்த பல குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிதியுதவி மற்றும் அன்றாட உணவுப் பொருட்களையும் கொடுத்து, இரவு பகல் பார்க்காமல் களத்தில் நின்று மாநகர சபை உறுப்பினர் சபீஸ் உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மாநகர சபை உறுப்பினர் சபீஸின் சேவையை அக்கரைப்பற்று சமூகம் பாராட்டுவதோடு, இவரின் சேவை எதிர்வரும் காலங்களிலும் இந்த ஊருக்கு அவசியமான ஒன்று என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.











கொட்டும் மழையிலும் களப்பணியில் மாநகர சபை உறுப்பினர் சபீஸ் கொட்டும் மழையிலும் களப்பணியில் மாநகர சபை உறுப்பினர் சபீஸ் Reviewed by Editor on December 22, 2020 Rating: 5