இணையத்தளங்களில் வலம் வரும் மூலிகை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்



கொவிட்-19 தொற்றாளர்களுக்கு தரமானது என கூறி இணையத்தளங்களில் வலம் வரும் சுதேச மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான மூலிகை மருந்துகள் தொடர்பில் எதுவித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி, மக்கள் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ சிகிச்சைகளின் போது ஒரு நோய்க்கான மருந்ததைத் தயாரிக்கும் போது அதற்காகப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியமான விடயமாகும்.

இது தொடர்பில் சரியான விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதும் முக்கியம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


(News.lk)

இணையத்தளங்களில் வலம் வரும் மூலிகை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் இணையத்தளங்களில் வலம் வரும் மூலிகை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் Reviewed by Editor on December 15, 2020 Rating: 5