திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் இன்று (15) செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
இதன்பின்னர் விமானம் விபத்துக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியது!!!
Reviewed by Editor
on
December 15, 2020
Rating:
