(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியாக கடமை புரிந்த டாக்டர் திருமதி பரூஸா நக்பர் வருடாந்த இடமாற்றலுக்கு அமைவாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் செய்யப்படவுள்ளார்.
வைத்தியத் துறையில் சிரேஷ்ட அதிகாரியான இவர், சிறந்த ஆளுமை மிக்கவர் என்பதோடு, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையைத் தொடர்ந்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அல்லும் பகலும் அர்ப்பணிப்புடன் தனது காரியாலய அதிகாரிகள் குழுவினர் சகிதம் மிகவும் மும்முரமாக சேவையாற்றியவராவார்.
இவர் அக்கரைப்பற்றில் சுகாதார துறைக்கு ஆற்றிய சேவையை அக்கரைப்பற்று மக்கள் எந்தவொரு நேரத்திலும் மறக்க முடியாத அளவுக்கு சேவையாற்றியுள்ளார் என்பதை மறந்து விட முடியாது.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியாக எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் கடமையை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
