(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 7வது சர்வதேச ஆய்வரங்கு பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் அவர்களின் தலைமையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 22.12.2020 (செவ்வாய்) இணைய வழியில் நடைபெற இருக்கின்றது.
“இஸ்லாமிய அறிவியல் மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக மனித வள அபிவிருத்தியை மேற்கொள்வதில் நடுநிலையான அனுகுமுறையை கையாளுதல்” எனும் தொணிப் பொருளில் இவ்வாய்வரங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வின் பிரதம பேச்சாளராக மலேசிய மலாயா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்றைகள் கலாநிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் றைகானா ஹாஜி அப்துல்லாஹ் அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.
இவ்வாய்வரங்கில் சுமார் 66 ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட இருக்கின்றன என்பது விசேட அம்சமாகும் என ஆய்வரங்கு செயலாளர் திருமதி சுகீரா சபீக் தெரிவித்துள்ளார்.
