கல்முனை மட்டக்களப்பு ஊடாக கொழும்பு போக்குவரத்து சேவை ஆரம்பம்!

 


(கலாநிதி றியாத் ஏ.மஜீத்)

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை மட்டக்களப்பு ஊடாக  கொழும்பு போக்குவரத்து சேவை மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) முதல் வழமை போன்று இரவு 9.30 மணிக்கு  ஆரம்பமாகின்றது.

இது தொடர்பில் பயணிகள் தங்கள் கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலை முகாமையாளர் வி.ஜஃபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கான ஆசனப்பதிவுகள் நாளை சனிக்கிழமை (23) காலை 6.00 மணி முதல் கல்முனை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் ஆரம்பமாகின்றது எனவும்  கல்முனை சாலை முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.



கல்முனை மட்டக்களப்பு ஊடாக கொழும்பு போக்குவரத்து சேவை ஆரம்பம்! கல்முனை மட்டக்களப்பு ஊடாக  கொழும்பு போக்குவரத்து சேவை ஆரம்பம்! Reviewed by Editor on January 22, 2021 Rating: 5