அஜ்மல் அஸீஸின் கண்டுபிடிப்பும் இலங்கை முஸ்லிம் சமூகமும்!



இரத்த சோகையைக் கண்டறிய ஆக்கிரமிப்பு இல்லாத திரையிடல் கருவி (Non Invasive Screening Tool to Detect Anemia) ஒன்றின் கண்டுபிடிப்பிற்காக 2020 ஆம் ஆண்டிற்கான iCAN சர்வதேச கண்டுபிடிப்பு புதுமை போட்டியில் தங்கப்பதக்கமொன்றையும் விசேட விருதொன்றையும் பெற்று தாய் மண்ணுக்கு அஜ்மல் அஸீஸ் புகழ் சேர்த்துள்ளார் .

28 வயதுடைய அஜ்மல் அஸீஸ் குறித்த விருதுகளை கனடா அரசு மூலமும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையம் மூலமும் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் மூலமும் இவர் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டார். 

இவரது சாதனைகளுக்காக இவரை பாராட்டுவதோடு, இவர் மேலும் பல கண்டு பிடிப்புக்கள் மூலம் நம் தேசத்துக்கு புகழ் சேர்க்க வேண்டும் என பிரார்திக்கின்றோம் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


அஜ்மல் அஸீஸின் கண்டுபிடிப்பும் இலங்கை முஸ்லிம் சமூகமும்! அஜ்மல் அஸீஸின் கண்டுபிடிப்பும் இலங்கை முஸ்லிம் சமூகமும்! Reviewed by Editor on January 29, 2021 Rating: 5