இன்று ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவியேற்பு

 


அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸூம் இன்று புதன்கிழமை (20) பதவியேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு பதவியில் இருந்து வெளியேறும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளதோடு, இது அமெரிக்காவின் 150 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதவி ஏற்பு நிகழ்வில் முக்கியமான 200பேர் மாத்திரம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்வதுடன், ஏனையவர்கள் வீட்டில் இருந்து இதனை தொலைக் காட்சி வாயிலாக கண்டு கொள்ளும் படி ஜனாதிபதி பைடன் மற்றும் அவரது தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இன்று ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவியேற்பு இன்று ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவியேற்பு Reviewed by Editor on January 20, 2021 Rating: 5