ஓய்வு பெற்று சென்றார் அதிபர் தாஸீம்!!!


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று கோட்ட பாடசாலையான அக்/ஹிஜ்ரா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றிய அதிபர் எம.எச்.எம்.தாஸிம் அவர்கள் இன்று (05) தனது பத்து வருட கால அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்று சென்றார்.

இவர் இப் பாடசாலையின் கல்வி நடவடிக்கை, பெளதீக திட்டமிடல், மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்துதல் போன்ற விடயங்களில் இரவு பகல் பாராது முழு மூச்சாக இக்கல்லூரிக்கு பெறும் பணி புரிந்தார் என்பதை மறந்து விடலாகாது.

நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இப்பாடசாலையில் பயின்ற மாணவர் ஒருவர் 197 அதி கூடிய புள்ளியை பெற்றதும் அதிபர் தாஸீம் அவர்களின் சேவைக் காலத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்று சென்றார் அதிபர் தாஸீம்!!! ஓய்வு பெற்று சென்றார் அதிபர் தாஸீம்!!! Reviewed by Editor on January 05, 2021 Rating: 5