
(றிஸ்வான் சாலிஹூ)
திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் டாக்டர் திருமதி சீதா அரம்பெபொல அவர்கள் நேற்று (04) திங்கட்கிழமை ஒருகொடவத்தையிலுள்ள கொரிய தொழினுட்பவியல் கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இந்நிறுவகம் தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் இயங்கும் விசாலமானதொரு நிறுவகம் என்பதுடன் இந்நிறுவகத்தின் நோக்கானது, இளைஞர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையினை பெற்றுக்கொள்ளாதவர்களை தொழில் முயற்சியாளர்களாகவும் மற்றும் தொழினுட்பவியலில் பண்பட்ட தொழில் சார்பியலாளர்களாகவும் உருவாக்குவதன் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதாகும்.
தற்போது இந்த நிறுவகமானது தன்னியக்கவாக்க எந்திரவியலாக்க தொழினுட்பம், கணனி தொழினுட்பம் போன்ற விடயத்துறைகளிலும் மற்றும் மனித எந்திரவியல் எனும் விடயத்துறை உள்ளடங்கலாக, உயர் அழுத்தம் மிகு தொழினுட்பத்துடன் தொடர்புடைய பல துறைகளிலும் பற்பல கற்கை நெறிகளினை முன்னெடுக்கின்றது.
கொரிய தொழினுட்பவியல் பயிற்சி நிறுவகத்தின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் அவர்களின் எதிர்கால திட்டங்கள் என்பவை தொடர்பில் கௌரவ அமைச்சர் வினவியதுடன், தற்போது 500 ஆக உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை 800 இற்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்வில் கொரிய தொழினுட்பவியல் பயிற்சி நிறுவக அதிகாரிகள் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
January 05, 2021
Rating:

