
(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய கல்வியல் கல்லூரிகளின் 2016/2018 ஆம் கல்வியாண்டு கல்வி கற்று வெளியேறிய டிப்ளோமாதாரர்களுக்கு எதிர்வரும் 2021.01.18 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமனம் பெறவுள்ள ஆசிரியர்கள் தமது பாடசாலை தொடர்பான விபரங்களை கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.ep.gov.lk என்ற முகவரியில் பார்வையிட முடியும் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் ஏ.ஜீ.முஹம்மட் பஸால் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நியமனக் கடிதங்கள் அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே நியமனம் பெறவுள்ள ஆசிரியர்கள் தமது நியமனக் கடிதத்தை பாடசாலை அமைந்துள்ள வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் 2021.01.17 ஆம் திகதி 11:00 மணிக்கு முன்னர் பெற்றுக்கொண்டு 2021.01.18 ஆம் திகதி உரிய பாடசாலைகளில் கடமை ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
