(ஜெமீல் கல்குடா)
சர்வதேச விமான போக்குவரத்து சேவை குழுமம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தினை அடுத்து உலக அளவில் வாடிக்கையாளர் சேவை விமானங்களில் பணிபுரியும் பைலட்களில் பாதிபேர் வைரஸ் தாக்கம் குறித்த பயம் காரணமாக பணிக்குச் செல்லவில்லை என்று கூறியுள்ளது.
விமான பயணிகளுக்கு அதிக சம்பளம், சலுகைகள் வழங்கப்படும். எனவே அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று என்ற ஓர் பொதுப்படையான எண்ணம் நம்மிடம் உள்ளது. ஆனால் உயிரை பணையம் வைத்து இவர்கள் இந்த வேலையை செய்து கொண்டிருப்பதை மறுப்பதற்கு இல்லை.
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இவர்கள் பணி நிமித்தமாக அடிக்கடி பயணிக்கும்போது கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகமாக உள்ளது. இந்த அச்சத்தின் விளைவாக தற்போது உலக அளவில் பல நாடுகளில் பைலட் பணியை பலர் தொடர்ந்துள்ளனர்.
2021-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் விமான பைலட் பணி நியமனம் குறித்து இந்த அமைப்பு ஒரு ஆய்வை மேற்கொண்டது. உலகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கும் 2,600 விமான பணி ஊழியர்கள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டுவரை கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் என்று விஞ்ஞானிகளின் கருத்து கணிப்பு கூறுகிறது.
மேலும் தடுப்பு மருந்துகள் அனைத்து நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட இன்னும் மூன்றாண்டு காலம் ஆகும் என்று உலகெங்கிலும் கருத்து நிலவுவதால் பைலட் பணியில் இருக்கும் பலர் மூன்று ஆண்டுகளுக்கு அந்த வேலையை துறந்து வேறு வேலைக்கு மாறத் துவங்கிவிட்டனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பைலட்களில் 30% பேர் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர். 6 சதவீதம்பேர் கொரோனா அச்சம் காரணமாக பைலட் பணியை தொடர்ந்து விமான துறையிலேயே வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். நான்கு சதவீதம்பேர் தங்கள் துறையில் மாற்றிக்கொண்டு வேறு துறைக்கு சென்று விட்டனர். 17% பேர் காலவரையற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
Reviewed by Editor
on
January 30, 2021
Rating:
