காதி நீதிமன்றங்கள் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும்


காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

காதி நீதிமன்றங்களின் வெற்றிடங்களுக்கு காதி நீதிபதிகளை நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பெபிலியான சுனேத்ரா தேவி விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், காதி நீதிமன்றங்கள் தொடர்பாக மீண்டும் பேசப்படுகிறது. ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு அமைய தனித்தனி நீதி மன்றங்கள் இருக்க முடியாது. காதி நீதிமன்றங்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது என்றார். 

காதி நீதிமன்றங்கள் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் காதி நீதிமன்றங்கள் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் Reviewed by Sifnas Hamy on January 26, 2021 Rating: 5