அலறியின் "துளி அல்லது துகள் " நூல் அறிமுக நிகழ்வு

 


அல்-மீஸான் பௌன்டேசன் ஏற்பாட்டில் கவிஞர், சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் எழுதிய "துளி அல்லது துகள் " இலக்கிய நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (30) காலை 9.30மணிக்கு மருதமுனை கலாச்சார மண்டபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கவிஞர் அம்ரிதா ஏயேமின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களும்,  சிறப்புரை வழங்க முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களும், நூலின் பதிப்புரையை  ஆய்வாளளும், இலக்கியவாதியுமான சிராஜ் மஸூர் அவர்களும், நூல் கருத்துரையை  இலக்கியவாதிகளான உமா வரதராஜன் மற்றும் கவிஞர் மன்சூர் ஏ காதிர் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.







அலறியின் "துளி அல்லது துகள் " நூல் அறிமுக நிகழ்வு அலறியின் "துளி அல்லது துகள் " நூல் அறிமுக நிகழ்வு Reviewed by Editor on January 25, 2021 Rating: 5