கலைஞர்களுக்கு காசோலை வழங்கல்



கிழக்கு மாகாண கலை இலக்கிய விழாவில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிங்கள மொழி மூல கலைஞர்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு அம்பாரை மாவட்ட செயலக டீ.எம்.அரியத்ன மண்டபத்தில் இன்று (25) திங்கட்கிழமை இடம்பெற்றது. 

இதன்போது வித்தகர் விருது, இளம் கலைஞர் விருது மற்றும் ஏனைய விருதுகளை பெறும் 22 கலைஞர்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.நவனீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வீ.ஜெகதீஸன், ஏ.எல்.லத்தீப், நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜீ.சிறியாணி பத்மலதா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் உட்பட பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கலைஞர்களுக்கு காசோலை வழங்கல் கலைஞர்களுக்கு காசோலை வழங்கல் Reviewed by Editor on January 25, 2021 Rating: 5