
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமாக் கடிதத்தினை ஜனவரி 1ஆம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரிடம் அவர் கையளித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திணைக்களப் பணிப்பாளர் இராஜினாமா செய்துள்ளார்
Reviewed by Editor
on
January 03, 2021
Rating:
