
(றிஸ்வான் சாலிஹூ)
சம்மாந்துறை பிராந்திய மக்களின் மிக நீண்ட கால சுகாதார தேவைகளை நிறைவேற்றுமுகமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்களை வழங்குதலும், கிளினிக் கட்டத்தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட கட்டிடத் தொகுதி திறப்பு விழாவும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம்.ஹனீபா தலைமையில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அவர்களிடம் உபகரணங்களை கையளித்தோடு, புதிய கட்டிடங்களை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் றஜாப், விசேட வைத்திய நிபுணர்கள், பிராந்திய திட்டமிடல் வைத்தியர் டாக்டர் எம்.சி.எம். மாஹிர், வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
