சவுதி அரேபியாவின் பனிக்கட்டி நகரங்கள்!!!

 

சவுதி அரேபியா என்றாலே அது பாலைவனம் அல்லது வெப்பமான நாடு என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், காலநிலை மாற்றத்தால் சவுதி அரேபியாவின் சில நகரங்களின் வெப்ப நிலை குளிர்காலத்தில் 0 டிகிரி செல்ஸியசுக்கும் கீழே செல்கிறது. குளிர்காலத்தில் உறைந்து போகும் சவுதியின் 7 பனிக்கட்டி நகரங்களைப் பற்றி இங்கு காணலாம்.


1.ஹெயில் (Ha’il)
2.துரைஃப் (Turaif)
3.தபுக் (Tabuk)
4.ராஃஹா (Rafha)
5.சகாகா (Sakaka)
6.அரார் (Arar)
7.அபஹா (Abha)
8.ஹெயில் (Ha’il)


1. ஹெயில் (Ha’il)

ஹெயில் (Ha’il) என்பது சவுதி அரேபியாவின் வடமேற்கு நகரம். இது இராஜ்ஜியத்தின் ஹெயில் (Ha’il) பிராந்தியத்தின் தலைநகரம் ஆகும். குறிப்பிட்ட சிலவகை பழங்கள், தானியங்கள் மற்றும் பேரீச்சை பழங்கள் போன்றவற்றின் உற்பத்தியால் இது விவசாயத்திற்கு பிரபலமான பகுதி. இது சவுதி இராஜ்ஜியத்தின் உறைபனி நகரங்களில் ஒன்றாகும். ஹெயில் நகரத்தின் இந்த ஆண்டின் குறைந்த பட்ச வெப்ப நிலை -2 ° C ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. துரைஃப் (Turaif)

துரைஃப் (Turaif) என்பது சவூதி அரேபியாவின் வடக்கு மாகாணத்தின் வெளிப்புற பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும், இது ஜோர்டான் நாட்டு எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த ஆண்டு துரைஃப் (Turaif) -இன் குறைந்த பட்ச வெப்பநிலை -1 ° C ஆகும்.

3. ராஃஹா (Rafha)

இராஜ்ஜியத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராஃஹா (Rafha), சவுதி அரேபியாவின் ஒரு நகரமாகும், இது ஈராக்கின் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த ஆண்டு ராஃஹா நகரத்தின் குறைந்த பட்ச வெப்பநிலை 0 ° C ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. தபுக் (Tabuk)

தபுக் பகுதி சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஜோர்டானிய மற்றும் சவுதி அரேபிய எல்லை பகுதிகள் தபுக் நகரம் தலைநகராக கொண்டுள்ளது. கடந்த வாரம் தபூக் நகரம் பனி போர்வையால் அதன் குடியிருப்பாளர்களையும், குடிமக்களையும் உறைய செய்தது. இங்கு 0 ° C இந்த ஆண்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. சகாகா (Sakaka)

அல் ஜவ்ஃ (Al Jawf) மாநிலத்தின் தலைநகரான சகாகா (Sakaka), சவுதி அரேபியாவின் வடமேற்கு நகரத்தில் அமைந்துள்ளது. இது அந்நாஃபுட் (AN Nafud desert) பாலைவனத்தின் வடக்கே உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, 0 ° C இந்த ஆண்டு சகாகா-வின் மிகக் குறைந்த வெப்பநிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. அரார் (Arar)

அரார் வடக்கு சவுதி அரேபியாவில் ஈராக் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது செம்மறி ஆடுகள் மற்றும் ஒட்டகங்களுடன் செழிப்பான வயல் நிலங்களையும் கொண்டுள்ளது. இந்த பகுதியின் குறைந்த பட்ச வெப்பநிலை 1 ° C வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. அபஹா (Abha)

அஸீர் மாகாணத்தின் (Aseer Region) தலைநகரான அபஹா, தென்மேற்கு சவுதி அரேபியாவில் செங்கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள பாறைக் குவியல்களுக்கு பிரபலமான அசீர் தேசிய பூங்கா (Aseer National Park), பறக்கும் விலங்குகள் (winged animals), அடர்த்தியான பசுமையான புதர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஜபல் சூடா (Jabal Soodah) மலை உச்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அபஹ நகரத்தின் இந்த ஆண்டின் குறைந்த பட்ச வெப்பநிலை 2 ° C ஆக இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சவுதி அரேபியாவின் பனிக்கட்டி நகரங்கள்!!! சவுதி அரேபியாவின் பனிக்கட்டி நகரங்கள்!!! Reviewed by Editor on January 15, 2021 Rating: 5