
(றிஸ்வான் சாலிஹூ)
பட்டமேற்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகமொன்றுக்கு உயர்கல்வியைத் தொடர்வதற்கு ஏறாவூரைச் சேர்ந்த சிவில் பட்டயப் பொறியியலாளரான ஏ.எல்.முஹம்மட் பிர்தெளஸ் பயணமாகின்றார்.
பொறியியலாளர் பிர்தௌஸ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிவமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளராக தற்போது கடமையாற்றி வரும் இவர், தன்னுடைய மேலதிக தகமைக்காக தனது நிறுவனத்தின் ஊடாக புலமைப்பரிசில் பெற்று பிரான்ஸ் நாட்டுக்கு பயணமாகிறார்.
தன்னுடைய மேலதிகாரிகளுடனும், சக ஊழியர்களுடனும் மிகவும் அன்பான முறையில் பழகுவதுடன், தன்னடக்கத்தோடு தன் கடமைகளை நிறைவேற்றும் இவர், ஏறாவூரின் முதலாவது பட்டயப் பொறியியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Eng.பிர்தௌஸ் உயர்கல்விக்காக பிரான்ஸ் பயணமாகிறார்!!
Reviewed by Editor
on
January 29, 2021
Rating:
Reviewed by Editor
on
January 29, 2021
Rating: